தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விலை நிர்ணயப் பட்டியலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில் போஸ்டர், பேனர் முதல் பிரச்சார வாகனங்கள் வரை பல பொருட்களின் விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், பிரச்சாரக் களத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படும் தமிழகத்தின் ஃபேவரைட் உணவுகளான சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மற்றும் சாப்பாடு (Meals) ஆகியவற்றின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால், பட்டியலில் இல்லாத உணவுப் பொருட்களுக்கான செலவை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.