2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பேச்சுவார்த்தை முறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக-வுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்க, விஜய்க்கு 80 தொகுதிகள் மற்றும் ஆட்சிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி என பாஜக தரப்பிலிருந்து மெகா ஆஃபர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், டிவிக்கீ பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன், “ரஜினிகாந்த் திமுக-வின் மிரட்டலால் தான் அரசியலுக்கு வரவில்லை” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்தின் மீதான இந்த விமர்சனத்தை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். ரஜினி ரசிகர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க விரும்பாததாலும், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியாலும் இந்த கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் வரும் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, விஜய் மற்றும் சீமானின் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி உருவாவது உறுதியாகியுள்ளது.
