காட்டுப்பகுதிகளில் தனியாகப் பயணம் செய்யவே பலரும் பயப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை உறைய வைத்துள்ளது. அடர்ந்த காட்டுப்பாதை ஒன்றில் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் தனியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, ஒரு பிரம்மாண்ட புலி சாலையின் நடுவே வந்து நின்றது. பொதுவாகப் புலியைக் கண்டால் யாராக இருந்தாலும் அங்கேயே வண்டியைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் அல்லது வண்டியைத் திருப்பிக் கொண்டு தப்பிப்பார்கள். ஆனால், இந்த நபர் “புலி வந்தா என்ன? எனக்கு வழி தான் முக்கியம்!” என்பது போலச் சற்றும் பயப்படாமல் வண்டியை நேராக ஓட்டிச் சென்றுள்ளார்.
தன் முன்னால் ஒரு மனிதன் பயமே இல்லாமல் வண்டியை ஓட்டி வருவதைப் பார்த்த அந்தப் புலி, ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனது. வேட்டைக்குத் தயாராக இருந்த அந்தப் புலி, பைக் சத்தத்தைக் கேட்டோ அல்லது அந்த நபரின் தைரியத்தைப் பார்த்தோ சட்டெனத் திரும்பிப் புதருக்குள் ஓடி மறைந்தது. இந்த ஒட்டுமொத்த சம்பவமும் வீடியோவாகப் பதிவாகி இப்போது இணையதளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த நபரின் அபாரத் தைரியத்தைப் பார்த்து ஒரு தரப்பினர் வியந்து பாராட்டினாலும், “இது அதிர்ஷ்டம் தான், அடுத்த முறை இப்படி நடக்காது” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். எப்படியோ, புலியைப் பயந்து ஓட வைத்த இந்த வீடியோ இப்போதைய டாப் ட்ரெண்டிங்.
