2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப்பிறகு, இந்திய வீரர்கள் ஐபிஎல் 2026 போட்டிகளுக்காகத் தயாராகி வருகின்றனர்.
உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி, தொடர் நாயகன்விருது வென்ற சஞ்சு சாம்சன், கேரளா திரும்பியதும் ஒரு சாதாரண தேநீர் கடையில் அமர்ந்து டீ குடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்றார். அங்கு ஒரு சிறிய கடையில் அமர்ந்து அவர் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த எளிமையான காட்சி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
இந்தத் தொடரில் 321 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார். வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 131 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
Varun Chakravarthy was seen sitting at a local shop with Sundar after completing the 14-km Girivalam (parikrama) around Arunachala Hill in Tiruvannamalai.
The moment reflected Varun’s simplicity and humility.❤ pic.twitter.com/ZVVbNv9Wk4
— Sonu (@Cricket_live247) March 12, 2026
“>
இதன் மூலம் அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களுக்கும் தலா 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையாகக் கிடைக்க உள்ளது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நட்சத்திர வீரர்களாக இருந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் இந்த எளிமையான அணுகுமுறை சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
