டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை கிரிக்கெட் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
தன்னை விமர்சிப்பவர்களுக்குத் தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்து வரும் ஹர்திக், “இந்த ஒரு கோப்பையுடன் நான் திருப்தி அடையப்போவதில்லை, இன்னும் 10 உலகக்கோப்பைகளை வெல்வதே எனது இலக்கு” எனத் திமிராகத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மைதானத்தில் அவர் செய்யும் சில செயல்களுக்காக நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த வெற்றிகளில் தான் குறியாக இருப்பதை ஹர்திக் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாண்டியாவின் இந்த ‘கான்பிடன்ட்’ பேச்சு ஒருபுறம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மறுபுறம் சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
