குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், திடீரென ராட்சத முதலை ஒன்று ஊர்ந்து சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த வேளையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த முதலை மிக சாதாரணமாக நடந்து சென்றது. இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய நிலையில், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் சாலையில் நடந்து சென்ற முதலை
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஒரு சாலையில் பெரிய முதலை ஒன்று நடந்து சென்றது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு முதலையை கூண்டில் அடைத்தனர்.#Gujarat #Crocodile pic.twitter.com/AXgzz1KNxC
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) March 8, 2026
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த முதலையைப் பத்திரமாகப் பிடித்தனர். அந்தப் பகுதியில் உள்ள விஷ்வாமித்ரி நதியிலிருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு கூண்டில் அடைக்கப்பட்ட அந்த முதலை, மீண்டும் பாதுகாப்பான வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
