கஜகஸ்தான் நாட்டில் எட்டாவது மாடி ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை, உயிரைப் பணயம் வைத்து ஒரு நபர் காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தச் சிறுமி தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து, பிடிமானம் இல்லாமல் உயரத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறிய நிலையில், அதே கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்த ஒரு நபர், யோசிக்காமல் தனது ஜன்னல் வழியாக வெளியே இறங்கி அந்தச் சிறுமியைப் பத்திரமாக மீட்டார்.
🔴In Kazakhstan,the man who climbed out of his eighth floor apartment window to save the helpless three-year-old girl. pic.twitter.com/NmKvVWhgg1
— International Relations (@Intl_Relations0) March 8, 2026
இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ‘எக்ஸ்’ (X) வலைதளத்தில் வெளியாகிப் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. நூலிழையில் அந்தச் சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அந்த நபரின் துணிச்சலான செயலைப் பார்த்து உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் அவரை ‘நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோ’ என்று புகழ்ந்து வருகின்றனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அத்தனை உயரத்தில் அவர் காட்டிய வேகம் மற்றும் துணிச்சல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
