மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் தனது மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த இளைஞரைத் தந்தை ஒருவர் நேரில் சந்தித்துக் கண்டித்துத் தாக்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 15 நாட்களாக இணையவழி வாயிலாகத் தொடர்ந்து ஒரு இளைஞரால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
🚨Pune Shocker: Father Fights Back.
Angry father confronts & beats alleged harasser of his daughter at MIT ADT Pune campus.
15 days of online harassment ignored by college : Father steps in.
Viral clip: Salute to protective Father. 🙏 pic.twitter.com/CZ8g61btXr
— Ramesh Tiwari (@rameshofficial0) March 7, 2026
முன்னதாக இது தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த தந்தை அந்த இளைஞரை வளாகத்திலேயே தண்டித்ததாகக் கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்புகள் சரிவரச் செயல்படாத நிலையில் தந்தையே இத்தகைய முடிவை எடுத்ததாகப் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவியரின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
