ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.

பொப்பில்லங்கா கிராமத்தைச் சேர்ந்த சீதாராமராஜு என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்த மனைவி லதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த லதா கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், தனது தாயார் லட்சுமியைப் பார்க்க வந்தபோது அங்கு புகுந்த சீதாராமராஜு தனது நண்பர்களுடன் சேர்ந்து லதாவையும், அவரைத் தடுக்க வந்த மாமியாரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார்.

ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று வந்த சீதாராமராஜு, இரண்டாவது திருமணமும் செய்துள்ள நிலையில், இந்த வெறிச்செயலை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் பாவி மற்றும் அவனது நண்பர்களைப் பிடிக்க போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.