இந்தியாவின் ஹோலி கொண்டாட்டங்கள் உலகப் புகழ்பெற்றவை என்றாலும், சில சமூக விரோதிகளின் செயலால் அது வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பிரிட்டா என்பவர் பிருந்தாவனத்தில் ஹோலி கொண்டாடியபோது அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கூட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் வண்ணப் பொடியுடன் கற்களையும் கலந்து பிரிட்டாவின் கண்ணிலேயே நேராக எறிந்துள்ளனர். “அது நரகத்தைப் போல எரிந்தது, நான் வலியால் துடித்தேன்” எனப் பதிவிட்டுள்ள அவர், பல நாட்களுக்குப் பிறகும் தனது பார்வை மங்கலாகவே இருப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
தவறாக நினைக்காதீர்கள், இது ஹோலி என்ற பெயரில் நடக்கும் இத்தகைய அத்துமீறல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவின் சுற்றுலாப் பெயரைக் கெடுப்பதாக நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
