ஈரான் மீது நேற்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வெளி தாக்குதல் நடத்தியதில் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் சூழ்ந்துள்ளது. ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனி, அவரது மகள், மருமகன் மற்றும் மருமகள் பேரக்குழந்தைகள் என அனைவரும் குடும்பத்தோடு கொல்லப்பட்டது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு நிச்சயமாக பழி வாங்குவோம் என ஈரான் அரசும் அந்த நாட்டு ராணுவமும் சூளுரைத்துள்ளது.

இதன் காரணமாக தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் புர்ஜ் கலிபா அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துபாய் அரசு அந்த நாட்டு மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ள நிலையில் அனைத்து விமான நிலையங்களையும் மூடி உள்ளது. இந்த நிலையில் துபாய் நாட்டில் தற்போது பல பிரபலங்கள் சிக்கியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆறு முதல் எட்டாம் தேதி வரை பிரபல நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் ரேசில் கலந்து கொண்டிருந்தார்.

இதன் காரணமாக தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். இதேபோன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், மாதவன், மம்முட்டி மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆகியோரும் துபாயில் தான் வசித்து வருவதாக ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவு வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் இது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த நடிகர்களின் நிலை என்ன என்று அறிய பலரும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.