சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 2400 வரையில் அதிகரித்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் மற்றும் மாதத் தொடக்கமான மார்ச் 1ஆம் தேதியும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,26,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 320 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.