தாயின் மீதான ஒரு சிறுவனின் தூய்மையான அன்பை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் கடைக்குச் சென்று தனது அம்மாவுக்குப் பரிசாக அளிக்க ஒரு ஜோடி கம்மல்களைத் தேர்வு செய்கிறான்.

அதன் விலை 40 ரூபாய் என்று தெரிந்ததும், தனது சட்டைப் பையில் இருந்த சில்லறை காசுகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி அந்தத் தொகையைச் சேர்க்கிறான். சிறுவனின் இந்த மழலை மாறாத அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன கடை உரிமையாளர், “உன்னிடம் எவ்வளவு இருக்கிறதோ அதையே கொடு” என்று கூறியும், அந்தச் சிறுவன் முழுத் தொகையையும் கொடுத்துவிட்டுத் தனது தாய்க்கான பரிசை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கிறான்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கடை உரிமையாளர், “அன்பிற்கு வயது கிடையாது; சிறிய கைகளில் தாய்க்கான பெரிய அன்பு” என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இந்தக் காலத்திலும் இவ்வளவு பாசமான பிள்ளையா?” என்றும், “இந்தச் சிறுவனைப் பெற்ற தாய் கொடுத்து வைத்தவர்” என்றும் உணர்ச்சிகரமாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Adishree_hair_ accessories and jwellry ✨️ (@adishri6796)

“>

தாயும் மகனும் கொண்டிருக்க வேண்டிய உன்னதமான உறவுக்கு இந்தச் சிறுவன் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறான் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.