நிஜ வாழ்க்கை ஒன்றும் சினிமா கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு திருமண வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக திருமண மேடையில் சில மணமகன்கள் தங்களை பெரிய ஹீரோவாக நினைத்துக்கொண்டு ஏதாவது சாகசம் செய்யப் போய், அது கடைசியில் சொதப்பலில் முடிவதுண்டு.
அப்படி ஒரு வீடியோவில், மணமகன் தனது வருங்கால மனைவியை கைகளில் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக மேடை ஏற முயன்றார். மண்டபத்தில் இருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்த, அடுத்த நொடியே எதிர்பாராத விதமாக மணமகனின் கால் வழுக்கி, மணப்பெண்ணுடன் அப்படியே மேடையிலேயே குப்புற விழுந்தார்.
இந்த வீடியோவை ‘எக்ஸ்’ (X) தளத்தில் லட்சக்கணக்கானோர் பார்த்துச் சிரித்து வருகின்றனர். மணமகன் ‘கூல்’ ஆகக் காட்டிக்கொள்ள முயன்று, கடைசியில் எல்லோர் முன்னிலையிலும் ‘போப்பட்’ ஆனதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
जिंदगी मे इतना ओवर कॉन्फिडेंस नहीं होना चाहिए 😄😄🤗😛 pic.twitter.com/r1viqLvP9K
— हिन्दू गोविंदा राजपूत 🙏 🇮🇳 (@hindugj) February 26, 2026
“>
“ரொம்ப ஓவராக சல்மான் கான் போல நடிக்க ஆசைப்பட்டால் இதுதான் கதி” என்றும், “பாவம், அந்த மணமகன் இனி தன் திருமண வீடியோவை பார்க்கவே கூச்சப்படுவார்” என்றும் பலரும் தமாஷாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
