உறவுகளில் ஏற்படும் விரிசலுக்குப் பிறகு, குறிப்பாக சண்டையிடும் குணமுள்ள துணையை பிரிந்த பின், இளைஞர்கள் தங்களது சிகை அலங்காரத்தை மாற்றுவது தற்போது ஒரு வைரல் ட்ரெண்டாக மாறியுள்ளது. மன அழுத்தத்திலிருந்தும், பழைய கசப்பான நினைவுகளிலிருந்தும் விடுபட்டு, தங்களை ஒரு புதிய மனிதராக வெளிப்படுத்திக் கொள்ளும் அடையாளமாகவே இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.

மேலும் சமூக வலைதளங்களில் இது ஒரு சவாலாகவும் பரவி வருவதால், பலரும் தங்களது பழைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி, “புதிய தொடக்கம்” என்பதை பறைசாற்றவே சலூன்களுக்கு படையெடுக்கின்றனர். உளவியல் ரீதியாக, இந்த மாற்றத்தை தெரபியூட்டிக் ஹேர்கட்’ என்று அழைக்கிறார்கள்.

ஒரு நபர் தனது தோற்றத்தை மாற்றும்போது, அது அவர்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கையையும், பழைய பந்தங்களிலிருந்து விடுபட்ட உணர்வையும் தருகிறது. இந்த ட்ரெண்ட் மேலை நாடுகளில் என்ற பெயரில் பிரபலமாகத் தொடங்கி, தற்போது இந்திய இளைஞர்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இது வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், ஒரு தோல்வியுற்ற உறவிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்துவிட்டோம் என்பதைக் குறிக்கும் வகையில் இதனை செய்து மனநிலை மாற்றமாகவும் கருதப்படுகிறது.