சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நர்சரி தோட்டத்தில், வனக் காவலர் ஒருவர் தனது தோழியுடன் இருந்தபோது அப்பகுதி இளைஞர்களிடம் கைகலப்பாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீருடையில் இருந்த அந்த காவலரை சூழ்ந்துகொண்ட சில இளைஞர்கள், அவரை தடி மற்றும் பெல்ட்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது, அதில் காவலர் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், வலுக்கட்டாயமாக நடனமாடச் சொல்லி அந்த இளைஞர்கள் அவரை அவமானப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் மக்களிடையே பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
छत्तीसगढ़ के सूरजपुर जिले में एक फॉरेस्ट गार्ड से मारपीट का मामला सामने आया है। फॉरेस्ट गार्ड अपनी प्रेमिका के साथ बैठा था। इसी दौरान कुछ युवक वहां पहुंच गए और फॉरेस्ट गार्ड से मारपीट करने लगे। युवकों ने मोबाइल पर गाना बजाकर फॉरेस्ट गार्ड से डांस करवाया। इस घटना का वीडियो सोशल… pic.twitter.com/i77MYa2LTe
— NBT Hindi News (@NavbharatTimes) February 28, 2026
“>
மேலும் காவலர் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்ததை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு அரசு ஊழியரை இவ்வாறு பொதுவெளியில் வைத்து தாக்கிய இளைஞர்களின் செயல் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமான காவல்துறை விசாரணை மற்றும் நடவடிக்கை குறித்த தகவல்களுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
