இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தையை ஒரு சிறிய லோடர் வாகனத்தில் குட்டி யானை போன்ற வாகனம் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மகனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் வாகனத்தின் பின்புறம் தனது தந்தையின் தலையை மடியில் வைத்துக்கொண்டு, “அப்பா… கண்ணைத் திறங்கப்பா, ப்ளீஸ் அப்பா” என்று அந்த மகன் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களைக் குளமாக்கியது. முறையான மருத்துவ உதவி உரிய நேரத்தில் கிடைக்காததால் அந்த மகன் பட்ட துயரம் இந்திய சுகாதாரக் கட்டமைப்பின் அவல நிலையை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

“>

இந்நிலையில் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்தும், துரதிர்ஷ்டவசமாக அந்த மகனால் தனது தந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தத் தந்தை உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வறுமையும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான சாட்சியாக அமைந்துள்ளது. தந்தையின் உடலை வைத்துக்கொண்டு அந்த மகன் கதறியழுத வீடியோ, இணையவாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.