திருவாரூர் அருகே சிறுமிகள் குளிப்பதைப் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் குளிப்பதை, தனது செல்போன் மூலம் ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை தற்செயலாகக் கவனித்த சிறுமிகள், அதிர்ச்சியடைந்து உடனடியாகத் தங்களது பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உதயகுமாரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் வேறு ஏதேனும் தவறான வீடியோக்கள் அல்லது பதிவுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
