தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் விசிக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இந்த இணைவுப் படலம் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களுக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல், ராணிப்பேட்டை நகர தேமுதிக முக்கிய நிர்வாகிகளான தயாளன், வசந்தராஜா மற்றும் சதீஷ் ஆகியோர் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், அடுத்தடுத்து நடைபெற்று வரும் இந்த கட்சித் தாவல்கள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
