தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

சென்னை ராமாபுரம் பகுதியில் 37 வயதான புஷ்பா என்பவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் கார்த்திக் என்ற உறவினருக்கும் இடையே காதல் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு மாடியில் தூங்கச் சென்ற புஷ்பா மர்மமான முறையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

காதலன் கார்த்திக் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு பக்கம் இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், முகப்பேர் மேற்கு பகுதியில் சாலையோரம் வசித்து வந்த 52 வயது பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணின் அருகே போதையில் படுத்துக் கிடந்த 28 வயது ஷேக் என்பவனைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோதுதான் அந்தப் பகீர் உண்மை வெளிவந்தது.

அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, அடித்துக் கொன்றதை அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரே நாளில் அரங்கேறிய இந்த இரண்டு கொலைகளும் சென்னை பெண்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.