தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது மேடைகளில் பேசி வரும் விஷயங்கள் அனைத்தும், பத்து ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியவைதான் என்று ஜெ.தீபா விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் அதிமுகவின் வாக்குகளை மட்டும் பிரிக்காமல், அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் பிரிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“விஜய் இன்று பேசுவது
அன்று ஜெ. பேசியது தான்’’“தவெக தலைவர் விஜய் அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சியினர் ஓட்டையும் பிரிப்பார்.
இன்றைய அவரின் மேடை பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பேசியது தான்’’– ஜெ.தீபா#tvkvijay #JDEEPA #Jayalalitha… pic.twitter.com/FVrbEqdqGK
— Thanthi TV (@ThanthiTV) February 24, 2026
“>
விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் பேச்சுக்கள் புதியவை அல்ல என்றும், அவை ஏற்கனவே ஜெயலலிதாவால் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் பிரதிபலிப்புதான் என்றும் தீபா சுட்டிக்காட்டியுள்ளார்.
