அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைக்க கே.ஏ.செங்கோட்டையன் (KAS) தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, “அதிமுகவில் தனக்கு உரிய மரியாதை இல்லை” என அவர் கூறியிருந்தார். ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ள பி. தனபால், “அதிமுகவின் தீவிர விசுவாசியான நான் கட்சி மாறும் எண்ணத்தில் எப்போதுமே இருந்ததில்லை; என் மகன் கூறிய கருத்துக்களில் உண்மை இல்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் தேர்தலில் ‘சீட்’ கேட்கும் எண்ணம் கூடத் தனக்கு இல்லை என்றும், இறுதிவரை இரட்டை இலைக்கே விசுவாசமாக இருப்பேன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளதால், தவெக-வில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
