மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

கமுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்திலான தனது புதிய அரசியல் கொடியை அறிமுகப்படுத்தினார்.