மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா மனம் திறந்து பேசியுள்ளார்.

அம்மாவோடு நிழலாக இருந்து, அவரது வாழ்க்கையில் நடந்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தவள்  நான் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது அவருடன் கூடவே இருந்ததாகத் தெரிவித்தார்.

ஒரு நல்ல நாளைப் பார்த்து அவரை வீட்டிற்கு அழைத்து வரத் தயாராக இருந்த சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அவருக்கு மாரடைப்பு (Attacks) ஏற்பட்டுவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆனால், இந்த உண்மையை மறைத்துவிட்டு வெளியே உள்ளவர்கள் தன் மீது பழி சுமத்தியதாகவும், தான்தான் அவரைத் திட்டமிட்டு கொன்றுவிட்டதாகப் பலரும் இல்லாத கதைகளைக் கட்டிவிட்டதாகவும் சசிகலா மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.