சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு எருமை கன்றுக்குட்டியை ராட்சதப் பாம்பு ஒன்று சுருட்டிப் பிடிக்கும் வீடியோ வெளியாகி இணையவாசிகளை உறைய வைத்துள்ளது.

வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு எருமை கன்றுக்குட்டியை நோக்கி, எங்கிருந்தோ ஊர்ந்து வந்த ஒரு பெரிய கருநாகம், மின்னல் வேகத்தில் அதன் உடல் முழுவதும் சுற்றிக்கொண்டது.

பாம்பு உடலை இறுக்கத் தொடங்கியதும், கன்றுக்குட்டி தப்பிக்க முடியாமல் மரண பயத்தில் அங்கும் இங்கும் துடித்த காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளன.

“இதென்ன கொடுமை.. இதைப் பார்த்து வீடியோ எடுப்பதற்குப் பதில் யாராவது காப்பாற்றக் கூடாதா?” என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆவேசத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

இறுதியில் கன்றுக்குட்டி பிழைத்ததா அல்லது அந்தப் பாம்பிற்கு இரையானதா என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை என்றாலும், இந்த “திக் திக்” வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.