சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விலை உயர்ந்த பனாரசி சேலை அணிந்த பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்கிறார். அப்போது அவரது சேலை எதிர்பாராதவிதமாக பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கத் தொடங்குகிறது. இதைக் கவனித்த பின்னால் வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை எச்சரிக்க முயன்றார்.

ஆனால், அந்த இளைஞர் ஏதோ வம்பு செய்கிறார் அல்லது போன் நம்பர் கேட்கிறார் எனத் தவறாகப் புரிந்துகொண்ட அந்தப் பெண், அலட்சியமாகத் திரும்பிப் பார்க்காமல் சென்றார். அடுத்த சில நொடிகளில் சேலை சக்கரத்தில் முழுமையாகச் சிக்கி, அந்தப் பெண் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் சிக்கி கீழே விழுந்த அந்தப் பெண், தனக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி கவலைப்படாமல், தனது விலை உயர்ந்த பனாரசி சேலை கிழிந்துவிட்டதே என்று வருத்தப்பட்டது பார்ப்பவர்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

“>

 

இந்த வீடியோ நகைச்சுவையாகத் தெரிந்தாலும், இருசக்கர வாகனங்களில் சேலை அல்லது துப்பட்டா அணிந்து செல்லும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

“ஆபத்தை உணராமல் தவறாகப் புரிந்துகொண்டால் இதுதான் நிலைமை” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.