பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினர், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இஸ்கான் கோவிலுக்குச் சென்றுவிட்டு வாடகை காரில் வீடு திரும்பினர். அப்போது காரின் பின் இருக்கையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த தங்களது 4 வயது மகன் ஜியான் சுங்கியை கவனிக்காமல், தம்பதியினர் மட்டும் காரை விட்டு இறங்கி வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து குழந்தை காணாமல் போனதை உணர்ந்த பெற்றோர், உடனடியாக காவல் உதவி எண்ணிற்கு (Namma 112) தகவல் தெரிவித்தனர்.புகார் கிடைத்த 2 நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காரின் பதிவு எண்ணைக் கண்டறிந்தனர்.
<a href="http://
Bengaluru: A family returning home to Ponnappa Layout in Hennur on Feb 14 failed to notice that their 4-year-old child was still asleep inside the cab, which then drove away.
Alerted via Namma-112 at 8.26pm, Hennur Police tracked the vehicle, contacted the driver & safely… pic.twitter.com/OME8Qh1zrF
— ChristinMathewPhilip (@ChristinMP_) February 16, 2026
“>
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காரின் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீசார், ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு உடனடியாகத் திரும்பி வருமாறு உத்தரவிட்டனர். கார் ஓட்டுநர் குழந்தையை கவனிக்காமலேயே அதற்குள் மூன்று சவாரிகளை முடித்திருந்தது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியது.
இறுதியாக கார் திரும்ப வந்தபோது, குழந்தை ஜியான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதே இருக்கையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். போலீசார் குழந்தையைப் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்ட போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில், குழந்தையை மறந்த பெற்றோரின் அலட்சியத்திற்குச் சமூக வலைதளங்களில் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
