தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மக்கள் நலத்திட்டங்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டியுள்ளதை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றுள்ளார்.
பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் அரசைப் பாராட்டுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று அதிமுக உறுப்பினரே வாழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்தால் ஏற்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஜனநாயக சக்திகள் யார் வந்தாலும் வரவேற்போம் என்று செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
இது குறித்து இறுதி முடிவை தமிழக முதல்வர் எடுப்பார் என்றும், தற்போது திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
