தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் தவெக தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைமை மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி யாராவது பண மோசடியில் ஈடுபட்டால், அவர்கள் உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.