தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறையை முழுமையாக நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், இனி அனைத்து சுங்கக் கட்டணங்களையும் ஃபாஸ்டேக்  அல்லது யுபிஐ மூலமாக மட்டுமே செலுத்தும் வசதியைக் கொண்டுவர இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும்போது, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது குறையும் மற்றும் பயண நேரம் மிச்சமாகும்.

மேலும், கட்டணம் வசூலிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், சுங்கச்சாவடிகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.