நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மகேஷ் (23), கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்திருந்தார். கடந்த 16-ஆம் தேதி காவல்கிணறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
தனது கணவரின் இழப்பால் வாடிய போதிலும், அவரது உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மகேஷின் மனைவி மற்றும் குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழுவினர் மகேஷின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இந்த உறுப்புகளைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்த நோயாளிகளுக்காக, ஆம்புலன்ஸ்கள் மூலம் திருச்சி, காரைக்குடி மற்றும் நாகர்கோவில் மருத்துவமனைகளுக்குப் போக்குவரத்து போலீசாரின் உதவியுடன் தடையின்றி விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன.
“தன் கணவர் மறைந்தாலும் அவரது உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர் வாழ்வார்கள்” என்று மகேஷின் குடும்பத்தினர் கண்ணீரோடு தெரிவித்தனர்.
