சாலையில் செல்லும் போது ஏற்படும் அதீத வேகமும் கவனக்குறைவும் எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாகச் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு காணொளி காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.
— Zonadeaccidents (@Zonadeaccidents) February 16, 2026
ஒரு வீட்டின் அருகே 2 சிறுவர்கள் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று அவர்களை நோக்கிப் பாய்ந்துள்ளது. இதில் ஒரு சிறுமி நூலிழையில் உயிர் தப்பிய நிலையில் மற்றொரு சிறுவன் அந்த வாகனத்தில் சிக்கித் தூக்கி வீசப்பட்டுக் கடுமையான விபத்துக்குள்ளாகிறார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
இக்காணொளியைப் பார்க்கும் இணையவாசிகள் பலரும் வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயல்களுக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவிப்பதோடு எந்நேரமும் சாலைகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
