பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஸ்மார்ட் வாட்ச்சில் கியூஆர் கோடை வைத்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்திரநகரிலிருந்து கோரமங்களா பகுதிக்கு ஆட்டோவில் சென்ற பயணி ஒருவர், பணம் செலுத்த கியூஆர் கோடை கேட்டபோது, அந்த ஓட்டுநர் தனது மணிக்கட்டில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச்சைக் காட்டி டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுக் கொண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூருவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் அது எவ்வளவு இயல்பாக ஊடுருவியுள்ளது என்பதையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை எவ்வளவு வேகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

“ஐடி ஊழியர்களுக்கு இணையாக ஆட்டோ ஓட்டுநர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வியப்பாக இருக்கிறது” என்றும், “நமது மக்களின் புதுமை புகுத்தும் திறனை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது” என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

தொழில்நுட்பமும், சாமானிய மக்களின் உழைப்பும் இணையும்போது அது எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை இந்தச் சம்பவம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.