ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 5 வயது குழந்தையை மிகக் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்த கொடூர சம்பவம்!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

28 வயதான ஸ்ரவன் ராம், அவரது மனைவி லாச்சி மற்றும் 5 வயது மகன் விகாஸ் ஆகிய மூவரும் தூங்கிக் கொண்டிருந்த போதே இந்த விபரீதம் நடந்துள்ளது.

பாம்பு கடித்த 4 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், விஷம் உடல் முழுவதும் பரவி கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக 5 வயது சிறுவன் விகாஸ் மட்டும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், அவனுக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மூவரையும் கடித்துவிட்டு அதே கட்டிலுக்கு அடியில் சுருண்டு படுத்திருந்த அந்தப் பாம்பைக் கண்ட கிராம மக்கள், அனைவரும் ஒன்றாகத் திரண்டு தடியால் அடித்து அதைச் சம்பவ இடத்திலேயே கொன்றனர்.

ஒரு சிறிய அஜாக்கிரதையால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சோகமான சம்பவம் ஆன்லைன் வாசகர்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.