கார்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு முடித்திருத்தகத்தில் கன்னட மொழியில் பேசும் ஊழியர் வேண்டும் எனக் கேட்ட வாடிக்கையாளருக்கும் அங்கிருந்த ஹிந்தி மொழி பேசும் பெண் ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது முடிைத் திருத்தம் செய்வதற்கு கன்னடம் தெரிந்த ஊழியரை வாடிக்கையாளர் கோரியபோது அங்கிருந்த பெண் ஊழியர் ஹிந்தியிலேயே பேச முடியும் எனக் கூறி ஆவேசமாக வாதிட்டது சர்ச்சையை உருவாக்கியது.
🚨 SHOCKING DISRESPECT IN KARNATAKA! 🚨
A Kannadiga customer at a hair salon simply asked for a Kannada-speaking stylist, only to be met with horrific abuse from a Hindi-speaking staffer. The audacity to scream “This is India, Hindi works here”
Continues.#stophindiimposition https://t.co/loa75DeSsf pic.twitter.com/BxeSi8Wboq— Voice of kannada nd cricket 🧡❤️ (@BB22179) February 16, 2026
இந்த மோதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் உள்ளூர் மொழியை மதிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் தனியார் நிறுவனத்தில் மொழி உரிமையை வலியுறுத்த முடியாது என மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நிலவிய பதற்றமான சூழலால் அந்தப் பெண் ஊழியர் உள்ளூர் மக்களிடம் மன்னிப்பு கோரும் மற்றொரு காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.
