நீட் தேர்வு பயத்தால் பாட்னாவில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், “இப்போதெல்லாம் இதுபோன்ற தற்கொலைகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்; அதை இயல்பாக்கிவிட்டோம்” என்று நடிகை டாப்ஸி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனது புதிய படமான ‘அஸ்ஸி’ படத்தின் புரமோஷனுக்காக பாட்னா வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக முன்வைத்தார்.
”ஒரு உயிர் போவதை நாம் எண்ணிக்கையாக மட்டுமே பார்க்கிறோம், இது மிகப்பெரிய சமூக அவலம்” என்று கூறிய அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். வரும் 20-ம் தேதி வெளியாகவுள்ள ‘அஸ்ஸி’ படத்தில் ஊழல் மற்றும் ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் வழக்கறிஞராக டாப்ஸி நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நீட் தேர்வு மாணவர்களுக்காகக் குரல் கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
