ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதற்குச் சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயிலில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண்ணைப் பார்த்து, வாலிபர் ஒருவர் தொடர்ந்து அநாகரீகமான சைகைகளைச் செய்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.
வெள்ளை சட்டை அணிந்து கண்ணியமானவர் போலத் தோற்றமளிக்கும் அந்த நபர், அந்தப் பெண்ணைப் பார்த்து கண்ணடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற சைகைகளைச் செய்வது, உதட்டில் விரல் வைத்து அசிங்கமாகச் சிரிப்பது என எல்லை மீறிச் செயல்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் அப்பெண்ணின் மொபைல் எண்ணைக் கேட்டு நச்சரித்ததோடு, தன்னிடம் வருமாறு சைகை காட்டி வற்புறுத்தியுள்ளார்.
View this post on Instagram
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அந்த வாலிபரின் அநாகரீகச் செயல்களைத் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துப்போய், “இந்தச் சைக்கோவை உடனே கைது செய்து சிறையில் தள்ளுங்கள்” என ரயில்வே போலீஸாரைக் டேக் செய்து வலியுறுத்தி வருகின்றனர்.
