கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகப் பேசியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஜோதிமணி, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இழிவான தாக்குதல்களின் ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள அவர், சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.