தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களின் சுகாதாரத்தில் பெரும் அலட்சியம் காட்டப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் கொசுக்கள் அதிகளவில் பெருகியுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கான புகார்களை அளித்தும், அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
