இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசிய ஆங்கிலம் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நடந்த போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் மண்டியிட்ட பிறகு, தோல்வி குறித்து விளக்கம் அளிக்க வந்த சல்மான் அலி ஆகா, திக்கித் திணறி ‘புரோக்கன்’ ஆங்கிலத்தில் பேசினார்.

அவரது உச்சரிப்பையும், இலக்கணப் பிழைகளையும் கவனித்த நெட்டிசன்கள்,  என்னதான் சொல்ல வர்றீங்க? என ‘3 இடியட்ஸ்’ பட மீம்களைப் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ஆஸ்திரேலிய ரசிகர் ஜேக் ஜேகிங்ஸ் “வாயை மூடுங்க” என சைகை காட்டி பாகிஸ்தானை நக்கல் செய்ய, மறுபக்கம் கேப்டனின் ஆங்கிலப் பேச்சும் மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது.

“கிரிக்கெட் ஆடத்தான் வரல.. இங்கிலீஷ் கூடவா பேசத் தெரியாது?” என சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர்.