பாம்புகள் என்றாலே பயப்படுபவர்களுக்கு மத்தியில், ஒரு பாம்பு தன்னுடைய சொந்த வாலையே தானே விழுங்கும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @TheeDarkCircle என்ற எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர். பொதுவாக அதிகப்படியான வெப்பம், மன அழுத்தம் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும் போது, பாம்புகள் குழப்பமடைந்து தன் உடலையே மற்றொன்று என நினைத்து இப்படி விழுங்கத் தொடங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், அந்தப் பாம்பின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய ஒரு செயலாகும்.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) February 13, 2026
உண்மையில் உலகில் உள்ள சுமார் 3,700 பாம்பு இனங்களில் 15% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. இந்தியாவைப் பொறுத்தவரை 300-க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற 60-66 வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்தானவை. பெரும்பாலான பாம்புகள் மனிதர்களைக் கண்டாலே பயந்து ஓடக்கூடியவை தான். ஆனால், இப்படித் தன்னையே தான் உண்ணும் வீடியோக்கள் பாம்புகளைப் பற்றிய பயத்தையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
