தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைக்குப் பிறகு, அதிமுக மற்றும் தவெக தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், தவெக அமைச்சர்களின் சமீபத்திய நடவடிக்கைகளை மிகக் கடுமையாகவும், அதேசமயம் நகைச்சுவையாகவும் கலாய்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், தற்போதைய சூழலில் தமிழகத்தில் ஜனநாயகம் என்பது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளைப் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அவர்களின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருவதாக மிகக் காரசாரமாகச் சாடினார்.

​தொடர்ந்து தவெக அமைச்சர்களைக் கடுமையாக விமரிசித்த அவர், “இன்னைக்கு இந்த ஆட்சியில் ஜனநாயகம் ஒட்டுமொத்தமாக ஊத்திக்கிச்சு. இவங்களோட அமைச்சர்கள் எல்லாம் போய் கதறி அழுதுட்டு வர்றாங்களே… விஜய் செத்துப் போயிட்டாரான்னு அழுதாங்களா, இல்லை தமிழ்நாட்டுல ஜனநாயகம் செத்துப் போச்சுன்னு அழுதாங்களான்னே தெரியல!” என்று சிரித்தபடியே கலாய்த்துக் தள்ளினார்.

​”இதெல்லாம் ஒரு அரசியல் பொழப்பா?” என்று மிக அழுத்தமாகக் கேள்வி எழுப்பிய ஆர்.பி. உதயகுமார், மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடாமல் இப்படி அழுவது அரசியல் நாகரிகமாகாது என்றும் கிண்டலடித்தார். ஆர்.பி. உதயகுமாரின் இந்த அதிரடி மற்றும் கிண்டல் நிறைந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, தவெக தரப்பில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.