சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் அவர் காட்டிய அசுரத்தனமான ஆட்டம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தரவரிசைப் பட்டியலையே அதிர வைத்துள்ளது.

​ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தத் தொடர் முழுவதும் எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 151 ரன்களைக் குவித்து அசத்தினார். இவரது இந்த அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான ஆட்டம் காரணமாக, இந்தத் தொடரின் ‘தொடர் நாயகன்’ (Player of the Series) விருதையும் மிகக் கெத்தாகத் தட்டித் தூக்கினார்.

​இந்தச் சிறப்பான ஆட்டத்தின் பலனாக, சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி ஒரே அடியில் 230 இடங்கள் வரை முன்னிலை பெற்றுள்ளார். இதன்படி, சர்வதேச அளவில் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 48-வது இடத்தைப் பிடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

​”மேல ஏறி வாரேன்” என்று சவால் விடுக்கும் வகையில் ஒரே தொடரில் 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தைப் பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி வளர்ச்சி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய டி20 அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக இவர் உருவெடுப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.