சீனாவின் ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வருடாந்திர போனஸாக மில்லியன் கணக்கிலான ரொக்கப் பணத்தை (RMB) வாரி வழங்கிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேடை முழுவதும் மலை போலக் குவிக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை ஊழியர்கள் தங்களது இரண்டு கைகளாலும் அள்ளிப் பிடிக்க முடியாமல் திணறிய காட்சி பார்ப்பவர்களை வாயடைக்க வைத்தது. சில ஊழியர்களுக்குப் பணத்தை எடுத்துச் செல்ல தள்ளுவண்டிகளே தேவைப்படும் அளவுக்கு அந்த போனஸ் தொகை பிரம்மாண்டமாக இருந்தது.
✨🇨🇳This is the scene where a Chinese company is handing out year-end bonuses – millions of RMB in cash that’s simply impossible to hold in your arms.😂 pic.twitter.com/VaLCZmfj6O
— 🇨🇳XuZhenqing徐祯卿 (@XueJia24682) February 13, 2026
இந்த உற்சாகமான கொண்டாட்டம் குறித்த எக்ஸ் (X) பதிவு சமூக வலைதளங்களில் பலரது ஏக்கத்தையும் தூண்டியுள்ளது. “உழைப்புக்குக் கிடைத்த உண்மையான கௌரவம்” என ஒரு தரப்பினர் பாராட்ட, “நமக்கெல்லாம் ஒரு ஹைக் கிடைப்பதே கஷ்டம், இங்கே பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்களே” என ஐடி ஊழியர்கள் வேடிக்கையாகப் புலம்பி வருகின்றனர். லாபத்தை ஊழியர்களுடன் இப்படி வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் அந்த நிறுவனத்தின் கலாச்சாரம் உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
