அகமதாபாத்தில் தனது மகனின் மறைவால் வாடிய தந்தை ஒருவர், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரைப் பள்ளம் தோண்டிப் புதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகனின் நினைவாகவும், அவரது பிரிவைத் தாங்க முடியாமலும் இந்த முடிவை அவர் எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த விலையுயர்ந்த கார் கயிறுகள் மூலம் மெதுவாகக் குழியில் இறக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Feed India (@funfeedindia)

இந்தச் செயலைக் கண்ட பலரும் தந்தையின் ஆழ்ந்த துயரத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறி வரும் வேளையில், மற்றொரு தரப்பினர் இவ்வளவு பெரிய தொகையிலான காரைப் புதைப்பதற்குப் பதிலாக அதனை விற்று ஏழைகளுக்கு உதவியிருக்கலாம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.