சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற உணவு விலாகராகத் திகழ்ந்த எம்மா அமித், நேரலை வீடியோவிற்காக நச்சுத்தன்மை கொண்ட நண்டு வகையைச் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 51 வயதான எம்மா, தனது ரசிகர்களைக் கவரவும் அதிகப் பார்வைகளைப் பெறவும் வித்தியாசமான கடல் உணவுகளைத் தேடிப் பிடித்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by The Smart Local Philippines (@thesmartlocalph)

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், கொடிய விஷம் கொண்ட டெவில் வகை நண்டு ஒன்றைச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார். உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே எம்மாவுக்குக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

நண்டில் இருந்த நச்சுத்தன்மை அவரது ரத்தத்தில் கலந்ததால், மூச்சுத் திணறல் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த இந்த முயற்சி, அவரது வாழ்வின் இறுதி வீடியோவாக அமைந்துவிட்டது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், சமூக வலைதளக் கலைஞர்கள் ஆபத்தான சாகசங்களைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.