2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வீழ்த்திய சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றியை முன்கூட்டியே கணித்த நபர் ஒருவரின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த நபர் தனது வீடியோவில் மூன்று முக்கியமான “அதிர்ச்சிகளை” (Upsets) முன்கூட்டியே சொன்னார்:

​ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்.
​நேபாளம் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தும்.
​பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும்.

​இதில் முதல் கணிப்பு பலித்ததால், பிப்ரவரி 15-ம் தேதி (ஞாயிறு) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஜெயித்துவிடுமோ என்று ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும், அந்த நபர் மதியம் நடக்கும் நேபாளம் vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் நேபாளம் ஜெயித்துவிட்டால், அன்று மாலையே பாகிஸ்தான் இந்தியாவைத் தோற்கடிப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.