தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் ஆகியோருக்கு இடையே நடந்த பாசப் போராட்டம் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியின் போது முன்னால் இருந்த இருக்கையில் “நீங்கள் அமர்ந்து பேட்டி கொடுங்கள்” என இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மாறி மாறி அன்பு கட்டளையிட்டனர்.
ஒருகட்டத்தில், தனது கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன், பிடிவாதமாக இருக்கையில் அமர மறுத்து தரையிலேயே அமர்ந்து கொண்டார்.
கட்சியின் மேலிட நிர்வாகிக்கு அவர் காட்டிய இந்த மரியாதையும், இருவருக்கும் இடையே நிலவிய அந்தப் புரிந்துணர்வும் தற்போது சமூக வலைதளங்களில் “தவெக-வின் பாசக்கார நிர்வாகிகள்” என வைரலாகி வருகிறது.
