அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் இரண்டு பேர் மர்மமான உடல்நலக் குறைபாட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்தபோது, அவர்களின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் உயிரி ஆயுத ஆய்வகம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வகத்தில் கொரோனா, எபோலா மற்றும் மலேரியா போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் கிருமிகளும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான எலிகளும் இருந்தன.

இது குறித்து எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த ஆய்வகத்திற்கு சீன வங்கிகளிலிருந்து பெருமளவு நிதி கிடைத்துள்ளதும், கடந்த 2023-ம் ஆண்டு கலிபோர்னியாவில் மூடப்பட்ட மற்றொரு ரகசிய ஆய்வகத்துடன் இதற்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இது போன்ற ரகசிய ஆய்வகங்கள் இன்னும் எத்தனை இடங்களில் செயல்படுகின்றன என்பது தெரியவில்லை என அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

தற்போது சில நாடுகளில் முறையான அனுமதியின்றி ஆன்லைன் மூலமாகவே எளிதாக மரபணுக்களை வாங்க முடிவதால், இது போன்ற உயிரி ஆயுதங்களால் உலகிற்குப் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.