அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்து வரும் இறக்குமதி வரிகள் ஏற்கனவே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டி உலகையே அதிர வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு கவுன்சில் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் பேசிய விதம் பிடிக்காததாலேயே, அந்த நாட்டின் மீதான வரியை உயர்த்தியதாக டிரம்ப் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.

“சுவிஸ் தலைவர் என்னிடம் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார்; அந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் ஆரம்பத்தில் 30 சதவீதமாகத் திட்டமிட்டிருந்த வரியை, உடனடியாக 39 சதவீதமாக உயர்த்தினேன்” என்று டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் வரி விதிப்பு முறையை, வெறும் தனிப்பட்ட கோபத்திற்காக டிரம்ப் மாற்றியிருப்பது உலக நாடுகளிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. டிரம்பின் இந்த ‘முரட்டுத்தனமான’ அணுகுமுறையால் சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.